Nov 19

இம்முறை தேர்தலில் வாக்குப்பதிவு குறையும்


நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை அடுத்து தேர்தல் ஒன்று நாட்டில் இடம்பெற்றால் வாக்குப்பதிவு மிகக் குறைவாக காணப்படலாம் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. 

பொது மக்கள் படிப்படியாக நடைபெறும் தேர்தலில் இருந்து விலகி நிற்க ஆரம்பித்துள்ளதாகவும் பெப்ரல் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 

நாட்டில் தற்போது இடம்பெறும் அரசியல் சூழ்நிலை குறித்து கருத்துத் தெரிவிக்கும் போதே, பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொஹான ஹெட்டியாராச்சி இவ்வாறு குறிப்பிட்டார்.