Jun 20

வறுமையினால் அவதியுறும் இலங்கை மக்களுக்கு உதவும் “அற்புத குடும்ப நல ஆலய”ஆண்டு விழா!

“இலங்கையில் அன்றாட வாழ்விற்கு அத்தியாவசிய தேவையான உணவிற்கே வசதியின்றியும்வேலை வாய்ப்புஎதுவுமே இன்றியும் வறுமையினால் அவதியுறும் மக்களுக்கு சேவை செய்வதே எமது முக்கிய குறிக்கோளாகும்.

2016ம் ஆண்டு நாம் அங்கு சென்ற போது பட்டினியாலும்நோ யினாலும் அவதியுற்றுக் கொண்டிருந்தஎமது மக்களின் துயரங்களை நேரடியாகக் கண்டு மனம் வருந்தினோம்.

தினமும் கூலி வேலை செய்து தமது அன்றாடவாழ்விற்கு உணவளித்து வந்த கணவன்மாரை இழந்து விட்ட விதவைப் பெண்களினதும் பெற்றோர்களை இழந்து அநாதைகளாகி விட்ட அப்பாவி சிறுவர்களினதும் அவலங்களை நேரடியாக அவதானித்த போது எம் கண்களி ல் இருந்து கண்ணீர்மல்கியது.

அதனால் அவர்களுக்கு எம்மாலான உதிவிகளை செய்ய வேண் டும் என்ற உணர்வு எமது ஆழ் மனதில்இருந்து எழுந்தது. அவர்களுக்கு உதவி செய்யும் வகை யில் ஆண்டவர் தான் எம்மை இங்கு அனுப்பி வைத்துள்ளார் என்றஎண்ணம் எழுந்தது. அன்று முதல்; அன்பும்கருணை உள்ளமும் கொண்ட கனடா வாழ் மக்களின்அன்பளிப்புக்களினால் நாம் அவர்களுக்கு உதவி செய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதை இட்டு நாம் மிக்க மகிழ்ச்சிஅடைகின் றோம்.அத்துடன் தொடர்ந்து அன்பளிப்புகளை வழங்கி வரும் கருணை உள்ளம் கொண்டோரு க்கு எமதுநன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்களுக்கு இறைவனின் கருணையும் கிட்டும் என்பதில் சந்தேகமேஇல்லை.”

ஸ்காபறோ பெலாமி வீதியில்அமைந்துள்ள “அற்புத குடும்ப நல” ஆலயத்தின் மூலம் அற்புத சேவைகளையும் தொண்டுகளையும் பாஸ்ரர்கலாநிதி லோகநாதனும் அவரது பாரியார் திருமதி. செரீனாவும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

ஆண்டுதோறும் விழா நடாத்தி பொது மக்களினால் வழங்கப்படும் நிதியுதவினைக் கொண்டு அல்லலுறும் மக்களின்அடிப்படை தேவைகளை நிறை வேற்றுதற்கான வழிவகைகளை வகுத்து வருகின்றனர். இவ்வருடத்துக்கான நிதி சேகரிப்புநிகழ் ச்சி கடந்த 17ம் திகதி மாலை அவர்களது ஆலயத்தில் நடைபெற்றது.

அதில் கலந்து கொண் டிருந்தஅனைவருக்கும் சிற்றுண்டிகளும் குளிர்பானங்களும் வழங்கப்பட்டன. இவ்வைபவத்தில் உரையாற்றிய போதேதிருமதி.செரீனா லோகநாதன் மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்து உரையாற்றிய போதுபின்வருமாறு கூறினார்: “விதவைப் பெண்களுக்கும்அநாதைச்சிறுவர்களுக்கும் உதவும் வகையில் நாம் பல திட்டங்க ளை வகுத்து அமுல்படுத்தி வருகின்றோம்.

25 விதவைப்பெண்களுக்கு ஏற்கனவே சிறு கடைக ளை ஆரம்பிப்பதற்கான நிதி உதவியினை வழங்கி அதன் மூலம் வரும்வருமானத்தில் அவர்கள் கஷ்டமின்றி வாழ வழி வகுத்து கொடுத்துள்ளோம். மாங்குளத்தில் உள்ள ஒருபெண்மணியின் கடைக்கு அதிகளவிலான வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் பெயர் பலகையினையும் செய்துகொடுத்துள்ளோம்.

இத்தகைய எமது உதவிகள் அவர்களுக்குமன நிறைவினையும் மகிழ் ச்சியினையும் ஏற்படுத்திஉள்ளன. இது மாத்திரமல்ல கல்வி கற்க வசதியற்ற சிறுவர்களுக்கும் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளோம.; ஆசிரியர்கள் போதிக்கும் போது அவற்றை பதிவு செய்து கொள்ள ஒரு மாணவன “ரேப்றெக்கோடர்” வாங்கித் தருமாறு கேட்டார். ஐயாயி ரம் ரூபாவுக்கு நாம் ஒரு ரேப் றெக்கோடரை வாங்கிஅவருக்கு கொடுத்தோம்.

பெற்றோர்களை இழந்த அநாதைச் சிறுவர்களையும் நாம்பொறுப்பேற்று அவர்கள் கல்வி கற்பதற் கான வசதிகளையும் செய்து கொடுத்துள்ளோம். ஒரு மாணவி தான்கல்விகற்று நீதிபதியாக வர விரும்புவதாக சொன்னா. அவவுக்கும் நாம் உதவி செய்து வருகின்றோம். வசதிகுறைந்த மாண வர்களுக்கு உணவுரூபவ் உடைசப்பாத்துக்கள் பாடப் புத்தகங்கள் ஆகிய அனைத்தையும் நாம் வழங்கிவருகின்றோம்.

இங்கு கனடாவில் வாழும் உங்களின்கருணையினால் நீங்கள் வழங்கி வரும் நிதியினைக் கொ ண்டே நாம் இவற்றினை செய்து வருகின்றோம்.அதனால் உங்கள் அனைவருக்கும் நாம எமது மனதின் ஆளத்திலிருந்து எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம். கருணை உள்ளம் கொண்ட ஆண்டவரும் உங்களுக்கு அருள் பாலிப்பாராக.”“ 3னு ஆநனயை” புகைப் பட ஸ்தாபனத்தின் உரிமையாளரான திருமதி ஜனனி பாஸ்கரன் என்ற இளம் பெண் மேடையில்பதினையாயிரம் டொலருக்கான காசோலையினை அன்பளிப்புச் செய் தார்.

“ஆநசஉல ளூip” என்ற பெயருடைய கப்பலில் டாக்டர்களும்தாதிமார்களும் ஆபிரிக்கா போன்ற வறியநாடுகளுக்கு சென்று அங்குள்ள வறிய நோயாளர்களுக்கு வைத்திய சிகிச்சைசத்திர சிகிச்சை ஆகியவற்றினை இலவசமாக வழங்கி வருகின்றனர். அதற்காக பாதிரியார் கலாநிதி லோகநாதன் ““Miracle Family Care”சார்பில் மூவாயிரம் டொலர்களுக்கான காசோலையினை ““Mercy Ship”” அமைப்பினைச் சோந்த திருமதிஅரீனா ஒஸ்ரின் என்பவரிடம் அன்பளிப்பாக வழங் கினார்.

அவர் அதற்கு நன்றி தெரிவித்துஉரையாற்றிய போது பின்வருமாறு கூறினார்: “வசதி குறைந்த நாடுகளில் வாழும் சிகிச்சை பெறமுடியாது அவதியுறும் கடும் நோயாளிகளு க்கு இலவசமாக சிகிச்சை வழங்கும் நோக்குடன் 1978ம் ஆண்டு ““Mercy Ship”” சேவை ஆரம் பிக்கப்பட் டது. இப்பணியில் 49 நாடுகளைச் சேர்ந்த பல்லின டாக்டர்கள்தாதிமார்கள்மற்றும் ஊழியர்கள் அனைவரும் தொண்டர்களாகவே சேவை செய்து வருகின்றனர். இக்கப்பலில் சத்திர சிகிச்சைப்பிரிவும் இருக்கின்றது.

இது வரையில் இரண்டரை லட்சத்துக்கு மேலான நோயாளர்க ளுக்கு சிகிச்சைவழங்கப்பட்டுள்ளது. பொது நிறுவனங்கள்ஸ்தாபனங்கள் ஆகியனவற்றினால் வழங்கப்படும் நிதியுதவிகளைக்கொண்டே இச்சேவை வழங்கப்பட்டு வருகின்றது. எனவே எமக்கு நிதியுதவி வழங்கியுள்ள “Miracle Family Care”நிறுவனத்துக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்.

இறுதியில் திருமதி செரீனா லோகநாதன் தமக்கு நிதியுதவி செய்து வருவோருக்கும் மற்றும் தம் முடன் இணைந்துபல்வேறு பணிகளை தொடற்சியாக செய்து வரும் தொண்டர்களுக்கும் நன்றி கூறினார்.

வீரகேசரி மூர்த்தி