Nov 17

முடிந்தது ராஜபச்சே-வின் சதியாட்டம்! வெளியானது அதிகாரபூர்வ அறிக்கை.!!

இலங்கை நாடளுமன்றம் கடந்த சில தினங்களுக்கு முன் நள்ளிரவில் கலைக்கப்பட்டது, இலங்கை பிரதமராக பதவி வகித்து வந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த மாதம் 26 ஆம் தேதி அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தமிழ் இனப்படுகொலைக்கு காரணமான ராஜபக்சே இலங்கையின் புதிய பிரதமாராக நியமிக்கப்பட்டார்.


கடந்த 10 நாட்களுக்கு முன் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. மேலும் ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று கூறப்பட்டது. இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றத்தில் ரணில் விக்ரமசிங்கே, அவரின் ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட 10 மனு தாக்கல் செய்தனர்.

ரணில் விகரம்சிங்கேவின் மனுவை விசாரித்த இலங்கை உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு தடை விதித்து, தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்படும் என அறிவித்தது.

இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் 122 எம்பிக்களின் ஆதரவுடன் நிறைவேறியதாக சபாநாயகர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், நாளை அல்லது நாளை மறுதினம் ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் பிரதமராக மீண்டும் பதவி ஏற்க உள்ளதாக நம்மதகுந்த தகவல் வெளியாகியுள்ளது.