Nov 17

எஸ்.பி.எம் தேர்வுத் தாட்கள் கசிந்தனவா?

கோலாலம்பூர்,நவ.17- எஸ்.பி.எம் தேர்வின் மலாய்,கணிதம், சீன மொழித் தாட்கள் கசிந்துவிட்டதாக வெளியாகியுள்ள செய்தி உண்மையல்ல என்று கல்வி அமைச்சின் தேர்வு வாரியம் மறுத்துள்ளது.


அந்த மூன்று பாடங்களை உட்படுத்திய தேர்வு தாட்கள் கசிந்து விட்டதாக பரப்பப்பட்ட வதந்தி தொடர்பில் தேர்வு வாரியம் விசாரணை நடத்தி விட்டதாகவும், அப்படியொன்று நடக்கவே இல்லை என்றும் கல்வி அமைச்சு கூறியுள்ளது.

அதனால், அம்மூன்று பாடங்களுக்கான தேர்வை மாணவர்கள் மீண்டும் எழுத வேண்டும் என்று வதந்திகள் பரப்பப்படுவதை எல்லாம் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், இது போன்ற வதந்திகளை பரப்பி சம்பந்தப்பட்ட மாணவர்களையும், பெற்றோர்களையும் குழப்ப வேண்டாம் என கல்வி அமைச்சு பொது மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.