Nov 15

19ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றியமையே இன்றைய பிரச்சினைக்கு காரணம்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களே ஜனாதிபதிக்கும் நாடாளுமன்றத்திற்கும் இடையிலான இன்றைய பிரச்சினைக்கு காரணம் என பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அங்கஜன் இவ்வாறு குறிப்பிட்டார்.

அத்தோடு, கடந்த மூன்று வருடங்களாக நாட்டின் ஆட்சி சரியாக செல்லாத காரணத்தினாலேயே ஜனாதிபதி அதனை மாற்றியமைக்க முற்பட்டுள்ளார் என்றும் அங்கஜன் இதன்போது குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், இரு தரப்பினரும் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டி, பிரச்சினைகள் வலுப்பெற்று வருவதால், தேர்தலுக்கு செல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார்.