Jun 19

நம்பிக்கையில்லா பிரேரணை வாபஸ் பெற சம்பந்தன் இணக்கம்: வட மாகாண பிரச்சினைக்கு முடிவு


வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு  குறித்த நம்பிக்கை இல்லாப்  பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும்.  நாம் வெகுவிரைவில் சந்தித்தது  பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான  கலந்துரையாடலில் ஈடுபட  எதிர்பார்க்கிறேன்" என தலைவர் தமிழ் தேசிய கூட்டமைப்பு  தலைவர் இரா. சம்பந்தன்  வட மாகாண முதலமைச்சருக்கு இன்று மாலை அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார். 


இந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


தங்களது 19.06.2017 திகதியிடப்பட்ட கடிதத்திற்கு நன்றி  நீங்கள் கூறியுள்ள அனைத்து விடயங்களையும் கவனத்தில் கொண்டுள்ளேன். 


மேலும் மூன்று நிபந்தனைகளின் அடிப்படியில் இந்த விடயம் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டும் என தெரிவித்து ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த  பரமாச்சார்ய சுவாமிகள் மற்றும் பேரருட்திரு. வணபிதா. ஜஸ்டின் ஞானப்பிரகாசம்   ஆகியோர் அனுப்பியுள்ள கடிதமும் கிடைத்துள்ளது. 


சட்டபூர்வமானதும் சுதந்திரமானதுமான எந்தவொரு விசாரணைக்கும் இடையூறு விளைவிக்க கூடாது என்பதனை குறித்த இரண்டு அமைச்சர்களுக்கும் நான் தெரியப்படுத்துவேன். நான் தற்போது தொலைபேசியில் கௌரவ வட மாகாண ஆளுநரை தொடர்பு கொண்டு  குறித்த நம்பிக்கை இல்லாப்  பிரேரணை வாபஸ் பெறப்படும் என தெரிவித்துள்ள அதேவேளை, சம்பந்தப்பட்ட நபர்களோடு தொடர்பிலுள்ளேன். எல்லாம் நலமாகவே அமையட்டும். நாம் வெகுவிரைவில் சந்தித்தது  பல பிரச்சினைகள் தொடர்பில் மேலதிகமான  கலந்துரையாடலில் ஈடுபட  எதிர்பார்க்கிறேன்."

இவ்வாறு சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார்.