Nov 15

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்


கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்சமயம் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். 

ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

ஜனநாயகத்தை உறுதி செய்வதற்காக ஆர்ப்பாட்ட பேரணி இன்று ஐக்கிய தேசிய கட்சியினால் நடத்தப்படுகிறது.