Nov 15

கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை ஈ.பி.டி.பியின் உறுப்பினர் திருமதி ஜெயந்தி!

மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுகளை அகற்றுவது தொடர்பில் மாற்று நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி ஜெயந்தி!


மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள நேரங்களில் கழிவுப் பொருட்களை அகற்றுவதால் மக்களின் இயல்பு நிலைகள் பாதிக்கப்படுவதுடன் பலசுகாதார தொற்றுக்களுக்கு மக்கள் ஆளாக நேரிடுகின்றதுஎனவே யாழ் மாநகரசபையால் அகற்றப்படும் கழிவு அகற்றும் பணியை மக்களின்நலன்களை கவனத்தில் கொண்டு செயற்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதிஜெயந்தி சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றதுஇதன்போது உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

யாழ் மாநகரசபையின் கழிவு அகற்றும் வாகனங்கள் நாளாந்தம் தமது சேவைகளை அதற்கென குறித்தொதுக்கப்பட்ட நேரங்கள் என்றுஅட்டவணைப்படுத்தாது கண்ட கண்ட நேரங்களில் குப்பபைகளை அகற்றுகின்றதை அவதானிக்க முடிகின்றது.

இதன்காரணமாக மக்கள் நெரிசல் அதிகரிக்கும் நேரங்களில் அவர்கள் துர்நாற்றங்களால் பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடுகின்றது.இதனால் மக்களின் சுகாதாரம் மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு குறித்த சேவையைமேற்கொள்ளுமாறு அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே யாழ்ப்பாணம் நாவாந்துறை - காக்கைதீவு பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் காணப்படும் பற்றைகளால் பல்வேறுபட்ட சமூகசீரழிவுகளை அவதானிக்க முடிகின்றது.

இதனால் குறித்த பற்றைகளை உடன் அகற்றுமாறு பலதடவைகள் இந்த சபையில் நான் கோரியிருந்தேன்ஆனால் இதுவரைஅவதானத்தில் கொள்ளப்படவில்லைஎனவே மக்களது அசௌகரியங்களையும் கலாசார சீரழிவையும் தடுத்து எமது மக்களின்கலாசாரத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 கழிவகற்றலை தனியாரிடமிருந்து உடனடியாக பொறுப்பேற்பது மாநகரின் தூய்மைக்கு ஏற்றதல்ல – ஈ.பி.டி.பியின் மாநகர உறுப்பினர் இரா செல்வவடிவேல்!

யாழ் மாநகரின் கழிவகற்றல் நடவடிக்கைகளை தனியார் துறையிடமிருந்து உடனடியாக மாநகரசபை பொறுப்பேற்பது என்பது யாழ்மாநகரின் சுகாதார சேவைகளுக்கு நலன்தருவதாக அமையாது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் இராசெல்வவடிவேல் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ் மாநகரசபையின் மாதாந்த அமர்வு முதல்வர் தலைமையில் நடைபெற்றதுஇதன்போது உரையாற்றுகையிலேயேஅவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது மாநகரின் சுத்திகரிப்பு தொழிலை மேற்கொள்ளும் தனியாரது சேவையை நிறுத்தி மாநகரசபை அதனை பொறுப்பேற்க வேண்டும்என பலரும் விவாதிக்கின்றனர்ஆனால் உடனடியாக அவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுப்பதானால் யாழ் மாநகரசபைஆளணிகளை கொண்டு நிவர்த்தி செய்ய முடியாது போக வாய்ப்புள்ளது.

 யாழ் மாநகரசபை குறித்த செயற்பாட்டை மேற்கொள்வதானது சபைக்கு வருமானத்தை தருவதாக இருப்பதென்பது உண்மைதான்ஆனாலும் தனியாரை உடனடியாக நிறுத்துவதானது மாநகரின் சுகாதார சேவையை  கேள்விக்குறியாக்கும் செயற்பாடாகவே அமையும்.

அந்தவகையில் குறித்த நடவடிக்கையை ஒரு சமச்சீரான காலத்தில் படிப்படியாக குறைத்து மாநகரசபை பொறுப்பேற்பதனூடாகவே அதைசீர்ப்படுத்திக்கொள்ள முடியும்.

எனவே குறித்த சேவையை மாநகரின் சேவைப்பிரிவினருக்கு துறைசார் தரப்பினரூடாக பயிற்சிகள் வழங்கி அதை படிப்படியாகபொறுப்பேற்பதே  மாநகரின் சுகாதாரத்திற்கும் அழகுக்கும் வழிவகை செய்யும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.