Jun 19

யாரை விலகுமாறு யார் கேட்பது?

இவர்தான் முதலமைச்சர், இவரே ஏற்றவர், இவரே பொருத்தமானவர், மற்றவர்கள் விட்டுக்கொடுங்கள் எனக் கேட்டவர்களே, உங்கள் புத்தியைச் செருப்பால் அடியுங்கள் என மற்றவர்களிடம் சொல்வீர்களாக.

எம் தேர்வு தவறானது, பொருத்தமற்றவரை முதலமைச்சராக்கினோம், ஈழத் தமிழர்களே எம்மை மன்னீப்பீர்களாக எனக் கூறி அரசியலில் இருந்தே ஒதுங்குவீர்களாக.முதமைச்சரை நீக்குவோம் என மீண்டும் கேட்கிறார்கள்.

முன்பு தீர்மானத்தில் தவறியவர்கள்,மீண்டும் தவறான தீர்மானத்தைத் தமிழர் மீது திணிக்கிறார்கள்.

ஒரு தவறை மறைக்க மற்றொரு தவறைத் தமிழர் மீது திணிக்கிறார்கள்.அரசியலே தெரியாதவர்கள் அப்பொழுது மாவையைப் புறந்தள்ளினார்கள்.இப்பொழுது மாவையைப் புறந்தள்ளாதீர் எனத் தாம் தேர்ந்தவரையே கேட்கிறார்கள்.

தமிழரை நட்டாற்றில் விடத் தீர்மானித்தவர்கள் தமிழருக்காகத் தீர்மானிக்க முடியாது.சம்பந்தரே சுமந்திரனே விலகுங்கள்

தமிழர் அரசியல் எதிர்காலம் தமிழருடையதாக அமைவதாக.