Nov 15

தந்தையை தடியால் தாக்கி கொன்ற மகள்


அவிஸாவளை, சமருகம பகுதியில் மகள்  தந்தையை தடி ஒன்றில் தாக்கி கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

தந்தைக்கும் மகளுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக மாறியதையடுத்து மகள், தந்தை மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்தில் அவிஸாவளை, சமருகம பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபரான மகள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.