Nov 15

100 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இளஞ்சிவப்பு வைரக்கல் ஏலத்தில்!

சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா நகரில் கிறிஸ்டி, ஏல மையம் நடத்திய ஏலத்தில் மிக அழகிய இளஞ்சிவப்பிலான வைரக்கல் 370 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

10 காரட் எடை கொண்ட இந்த வைரக்கல் சுமார் 370 கோடி ரூபாவுக்கு (50 மில்லியன் டொலர்) ஏலம் சென்றுள்ளது. இது நீள் சதுரவடிவம் கொண்ட, பளிச்சென்ற இளஞ்சிவப்பு நிறம் கொண்டது.

குறித்த வைரத்தை பலரின் போட்டிக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த பிரபலமான ஹரி வின்ஸ்டன் (Harry Winston) எனும் நிறுவனம் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் ஒப்பன்ஹெய்மர் (Oppenheimer) வைர குடும்பத்திற்கு சொந்தமாக இருந்த இவ்வைரம் உலகின் மிகசிறந்த வைரங்களில் ஒன்று என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1920ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க சுரங்கத்தில் குறித்த வைரக்கல் கண்டு பிடிக்கப்பட்டது. பொதுவாக வைரங்கள் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும். ஆனால் இந்த வைரம் அரிய இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கின்றதே இதன் சிறப்பம்சமாகும்.