Jun 19

வைரலான க்யூட் குட்டி பாப்பா!...

தந்தையர் தினத்தில் தனது அப்பாவுக்கு வாங்கியிருக்கும் கிஃப்ட் குறித்து குட்டி பாப்பா கூறும் வீடியோ வைரலாகியுள்ளது. தனது அப்பாவுக்கு தான் கொடுக்க இருக்கும் பரிசு பிடிக்குமா என்றும் அந்த குட்டிப்பாப்பா குழப்பத்துடன் பேசுவதை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர்.

தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தந்தையர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

மேற்கத்திய நாடுகளில் தந்தையர் தினம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அன்புக்குரிய அப்பாவுக்கு என்ன பரிசளிப்பது என ஷாப்பிங் செய்வது அப்பிள்ளைகளின் பெரும் குழப்பமாக உள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரு குட்டி பாப்பா ஒன்று தனது அப்பாவுக்கு தந்தையர் தினமான இன்று பரிசளிக்க வாங்கியுள்ள கிப்ட் குறித்து அவ்வளவு அழகாக விளக்கியுள்ளது. கூடவே தான் வாங்கியிருக்கும் கிப்ட் தனது அப்பாவுக்கு பிடிக்குமா என்ற குழப்பதையும் முக பாவனைகளுடன் அந்த குட்டி பாப்பா வெளிப்படுத்தியிருக்கிறது.