Jun 19

முன்னாள் பிரதமர் டட்லியின் பிறந்த தினம் இன்று

முன்னாள் பிரதமர் டட்லி சேனாநாயக்கவின் பிறந்த தினம் இன்றாகும் இவரது பிறந்ததினத்தைமுன்னிட்டு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் பொரள்ளை சேனாநாயக்க சுற்றுவட்டத்திற்கு அருகாமையிலுள்ள டட்லி சேனாநாயக்கவின் அருகாமையில் வைபவம் நடைபெற்றது.

சபாநாயகர் கரு ஜயசூரிய அன்னாரின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்ததுடன் அஞ்சலிக் கூட்டமும்நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள்கலந்துகொண்டிருந்தனர்.

சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமர் டிஎஸ் சேனாநாயக்க மற்றும் திருமதி மோலி டுனுவிலஆகியோரின் மூத்த புதல்வராக 1911ம் ஆண்டு ஜூன்மாதம் 19ஆம் திகதி பிறந்தார்.

மக்கள் பிரதிநிதியாகவும் அமைச்சராகவும் எதிர்க்கட்சி தலைவராகவும் பிரதமராகவும் 1936ஆம்ஆண்டிலிருந்து அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்த இவர் 1973ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம்13ஆம்திகதி இவரது 61வயதில் காலமானார்.