Jun 19

செங்கோலுக்கு விரல் நீட்டினால் அதிகபட்சம் எட்டு வாரங்கள் தடை

செங்கோலுக்கு விரல் நீட்டினால் அதிகபட்சம் எட்டு வாரங்கள் தடை செங்கோலுக்கு கை நீட்டினால் அதிகபட்சம் 8 வாரகாலங்கள் தடைவிதிக்க முடியும் என புதியநிலையியற்கட்டளைகளில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சுபாநாயகரின் கருத்துக்களை கௌரவப்படுத்தல் சபை நடவடிக்கைகளுக்கு இடையூறளித்தல் உள்ளிட்ட சபைநடவடிக்கை நேரங்களில் சபாநாயாகருக்கு கட்டுப்படாது செயற்படும் பாரளுமன்ற உறுப்பினர்கள் மீது ஆகக்குறைந்த தண்டனையாக ஒரு வார காலம் பாரளுமன்றத்திற்கு அனுபமதிப்பதில்லை என்பதே தற்போதுவரையில் இருந்து வந்தது.

இதேநேரம் உறுப்பினர்களின் முறைகேடுகளுக்கான நடவடிக்களை கருத்திற்கொண்டு குறித்த தடையானதுஇரண்டுமூன்று ஆக்கூடுதலாக நான்கு வாரங்கள் வரையில் காணப்பட்டது.

தற்போது உறுப்பினர்கள் முறைகேடாக நடைபெறும் பட்சத்தில் ஆகக்குறைந்த தண்டனையாக இரண்டு வாரங்கள்தடைசெய்வதெனவும் செங்கோலுக்கு கை நீட்டினால் அல்லது அச்சுறுத்தினால் ஆக்கூடுதாலாக 8 வாரங்கள் தடைசெய்வதெனவும் புதிய நிலையியற் கட்டளையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.