Jun 19

காணமல்போனோர் அலுவலக சட்ட மூலத்தில் திருத்தம்

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும் நிர்வகித்தலும் பணிகளைநிறைவேற்றுதலும்) சட்டமூலத்தில் மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்த திருத்தங்களைஅங்கீகரித்துக்கொள்வதற்கான இரண்டாம் வாசிப்பு நாளை மறுதினம் புதன்கிழமை சபையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முன்னதாக காணமல்போன ஆட்களை பற்றிய அலுவலகத்தினை (தாபித்தலும்நிர்வகித்தலும் பணிகளைநிறைவேற்றுதலும) ஏற்கனவே வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் மக்கள்விடுதலை முன்னணி தமது பரிந்துரைகளை திருத்தங்களாக குறித்த சட்டமூலத்தில் மேற்கொள்ளவேண்டுமெனகோரிக்கை விடுத்திருந்தது.

இதனை தொடர்ந்து குறித்த திருத்தங்களை அங்கீகரிப்பதற்கான அனுமதியை அமைச்சரவையும்வழங்கியிருந்தது. இந்நிலையிலேயே இச்சட்டமூலம்தின் இரண்டாம் வாசிப்பு நடைபெறவுள்ளது.

இதேவேளை காணமல்போனவர்களின் உறவினர்கள் வடக்கில் தொடர்ச்சியாக போராட்டங்களை மேற்கொண்டுவருகின்ற நிலையில் அவர்களின் பிரச்சினைக்கு குறித்த அலுவலகத்தின் ஊடாக தீர்வுகளைவழங்குவதற்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வாய்ப்புக்கள் உள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.