Jun 19

கருத்துகளை தெரிவிக்க நாளை மறுதினம் வரை எம்.பிக்களுக்கு இறுதி சந்தர்ப்பம்

நிலையியற் கட்டளைகள் வரைபு தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது கருத்துக்களைமுன்வைப்பதற்கான இறுதி சந்தர்ப்பம் நாளை மறுதினத்துடன் நிறைவடையவுள்ளது.

முன்மொழியப்பட்ட பாராளுமன்ற நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபு சபாநாயகரால் சபையின்கவனத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஜுலை மாதத்தின் முதல்வார அமைவில் உள்ளதினமொன்றில் குறித்த நிலையியற் கட்டளை பாராளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்படவுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 2017 ஜூன் 21ஆம் திகதிக்கு முன்னர் குறித்த வரைபு தொடர்பாகஅவர்களின் கருத்துக்கள் பிரேரணைகள் மற்றும் திருத்தங்கள் ஆகியவற்றை சமர்ப்பிக்க முடியும்.

முன்மொழியப்பட்ட நிலையியற் கட்டளைகளின் இறுதி வரைபின் அடிப்படைகள் தொடர்பான பொதுக்கலந்துரையாடலொன்று தேவைப்படின் 2017 ஜூன் 22 அன்று காலத்தை ஒதுக்கீடு செய்யலாம் எனசபாநாயகர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.