Jun 19

சம்பந்தன் ஐயா அவர்களுக்கு -தமிழ்மக்கள் சார்பாக ஓர் உருக்கமான மடல்!

பெரு மதிப்பிற்குரிய சம்பந்தன் ஐயா அவர்களுக்கு -தமிழ்மக்கள் சார்பாக ஓர் உருக்கமான மடல்

19.06.2017

மதிப்புடையீர் !

கடந்தசில தினங்களாக வடக்கு மாகாண சபையில் ஏற்றப்பட்டுள்ள ஊழல் சிக்கல் தொடர்பாக பலவாறான அரசியல் நெருக்கடிகள் எழுந்திருக்கின்றன .இது ஏன் என அறியாது விழிக்கும் மக்கள் கூட்டத்துள் இருந்து இந்த மடலை வரைகின்றேன்.

நீங்கள் அறிமுகப்படுத்திய ஒருவருக்கே நாம் வாக்களித்து வடக்கு மாகாண சபைக்கு முதல்வராக்கினோம் இதை தாங்கள் அறியாமல் அல்ல

ஆனால் இப்போது மக்கள் மத்தியில் இருந்தும், முதலமைச்சர் பதவியில் இருந்தும் அவரை நீக்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சி,மற்றும் கட்சிகளின் உறுப்பினர்கள் எடுக்கும் தீர்மானத்தை தாங்கள் ஆதரிக்கும் நோக்கம் என்ன ? குற்றம் புரிந்தவர்களை தண்டிப்பதோ சீர்த்திருத்துவதோ அரசியலிலோ ,சமூகத்திலோ ஒரு பாரதூரமான பிழை அல்லவே ? ( முதலமைச்சரை நீக்குவதற்கான காரணமாகமக்கள் இப்போது அதனையே கருதுகின்றனர் )

உண்மையில் நீங்கள் முதலமைச்சரை பதவி விலகச்சொல்வதர்க்கான காரணத்தை பகிரங்கமாக மக்களுக்கு தெரிவியுங்கள் என வினயமாக கேட்டுக்கொள்கின்றேன் .

நீங்களும் ,முதலமைச்சரும் மாறி மாறி கடிதப்பரிமாற்றங்களை செய்வதில் பொருள் இல்லையே இது மக்களை பாதிக்கும் செயல் என்பதை நீங்கள் அறியாதவரும் இல்லை .

தனிப்பட்ட கட்சி பேதங்களுக்காகவும் ,அரசியல் நோக்கங்களுக்ககவும் மக்களை பழிவாங்குவது நியாயம் இல்லையே , எமக்கு இருக்கும் எதிர்க்கட்சி என்ற பலத்திற்கும் அப்பால் ,வடக்கு மாகாண சபையின் ஆட்சியே தமிழர்களுக்கான தனித்துவத்தை கொண்ட செயற்ப்பாடாக மக்கள் கருதுகின்றனர் ,இதனை தாங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நினைக்கின்றேன் ,தங்களுக்கான அரசியல் சார்ந்த அழுத்தங்கள் இருக்கலாம் அதனை தயவு செய்து மக்களில் திணிக்காதீர்கள்.

முதலமைச்சர் திரு .சி .வி .விக்னேஸ்வரன் அவர்கள் வடக்கு மாகாண சபையில் தொடர்ந்தும் முதலமைச்சராக இருப்பதனால் தமிழ் மக்கள் எதிர்கொள்ளப்போகும் ஏதோ ஒரு துர்ப்பாக்கிய நிலையை தாங்கள் கருத்தில் கொண்டு அவரை நீக்க முயல்கிறீர்கள் எனில் அது எதுவென தெருவியுங்கள் ,அதேபோல அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் தமிழ் மக்கள் அனுபவிக்கப் போகும் அந்த நன்மையான விடயம் எது என்பதனையும் தயவு செய்து தெரியப்படுத்துங்கள் .

அப்போதே தமிழ் மக்கள் ஒரு நின்மதியான அடுத்தகட்ட வடமாகாண ஆட்சியை எதிகொள்வதற்கு ஏதுவாக இருக்கும் என்பது மக்கள் சார்பாக என் வினயமான கருத்து .

இதைவிடுத்து மக்களை முழிக்க வைத்துவிட்டு நீங்கள் பொதுவில் எந்த வெளிப்படை கருத்துமற்ற கடிதங்களை பரிமாறிக்கொண்டு மக்களை குழப்பத்துக்குள் தள்ளவேண்டாம் , மக்கள் விருப்பங்களை நிறைவேற்றாமல் யாருக்கான அரசியலாக இது அமைகின்றது என்பதையும் குறிப்பிட தவற வேண்டாம் .

நன்றி