Nov 14

லண்டனில் நடைபெற்ற பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா

தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு அவர்கள் எழுதிய பூகோளவாதம் புதிய தேசியவாதம் நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று லண்டனில் Alperton Community school அரங்கத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமையில் நடைபெற்ற இந்த நூல் அறிமுகவிழாவில்தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்த்தினார்.

சிறப்புரைகளை திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீஸ், திரு.பாலகிருஸ்ணன் ஆகியோர் நிகழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராஜா நிகழ்த்தி நூலை அறிமுகப்படுத்தினார்.

விமர்சன உரைகளை திரு.சேனா முத்தையா, திரு.சிறீதரன், பேராசிரியர் புவனேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தினர்.

ஏற்புரையினை நூலாசிரியர் அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு இணைய காணொளி மூலம் நிகழ்த்தியதோடு, சபையோர் கேட்கும் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.

இவ்விழா தமிழாய்வு மையத்தின் ஊடகவியலாளர் அ.மயூரனின் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது.