Nov 13

மஹிந்த சுய மரியாதையை காத்துக்கொள்ள பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என மங்கள சமரவீர கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் “பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது சுய மரியாதையை காத்துக்கொள்ளும் வகையில் தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.