Nov 13

உலக வலைப்பின்னல் WWW ஆரம்பிக்கப்பட்ட நாள்: 13-11..!!

இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-


* 1851 – வாஷிங்டனின் சியாட்டில் நகரில் முதல் ஐரோப்பியக் குடியேற்றக்காரர்களான, ஆர்தர் ஏ. டென்னி என்பவரும் அவரது குழுவினரும் வந்திறங்கினர். * 1887 – மத்திய லண்டன் பகுதியில் அயர்லாந்து விடுதலைப் போராட்ட ஆதரவாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையில் மோதல் வெடித்தது. * 1887 – நவம்பர் 11-ல் சிகாகோவில் தூக்கிலிடப்பட்ட நான்கு தொழிலாளர் தலைவர்களின் இறுதி ஊர்வலத்தில் சுமார் 5,000 பேர் கலந்து கொண்டனர்.

* 1918 – ஒட்டோமான் பேரரசின் தலைநகர் கொன்ஸ்டண்டீனப்போல் நகரை கூட்டுப் படைகள் கைப்பற்றினர். * 1950 – வெனிசுவேலாவின் அதிபர் ஜெனரல் கார்லொஸ் டெல்காடோ சால்போட் படுகொலை செய்யப்பட்டார். * 1957 – கோர்டன் கூல்ட் என்பவரால் லேசர் கண்டுபிடிக்கப்பட்டது. * 1965 – அமெரிக்காவின் யார்மூத் காசில் என்ற பயணிகள் கப்பல் பகாமசில் மூழ்கியதில் 90 பேர் கொல்லப்பட்டானர். * 1970 – போலா சூறாவளி: கிழக்குப் பாகிஸ்தானில் இடம்பெற்ற மிகப்பெரும் சூறாவளியில் 5 லட்சம் பேர் வரையில் உயிரிழந்தனர். இது 20-ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இயற்கை அழிவு எனக் கருதப்படுகிறது).