Nov 13

வாகனங்களுக்கு றே லைற் ,எதிரொலிப்பான் போன்றவற்றை பொருத்துமாறு அறிவிப்பு

வாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை பொருத்துமாறும்,பொருத்தத் தவறும் வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என யாழ்ப்பாணப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் கே.பாலிதபெர்ணான்டோ தெரிவித்தார்.இவ் விடையம்  தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்.

யாழ்.மாவட்டத்தில் அண்மைக்காலமாக இடம் பெற்ற விபத்துக்கள் தொடர்பாக அவதானித்துப் பார்க்கும் போது துவிச்சக்கர வண்டி டிப்பர் லாண்ட் மாஸ்ரர் போன்ற வாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) பொருத்தப்படாமேயே விபத்துக்கள் ஏற்படுவதற்கு காரணமாக அமைகின்றது.

அதனால் அனைத்து சாரதிகளும் எதிர்காலத்தில் வாகனங்களில் றே லைற் (Rear Light) எதிரொலிப்பான் (Reflector) போன்றவற்றை பொருத்தும் படியும் பொருத்தத் தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.