Jun 19

தமிழரசு கட்சியின் உறுப்பினர்கள் பங்காளி கட்சியின் தலைவர்களை சந்திக்கவுள்ளனர்

தமிழரசு கட்சியின் மாகாண சபை சபை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரை சந்தித்த குழுவினர்  இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.ஏற்கனவே கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளாக ஈ பி ஆர் எல் எப்,புளோட் ,மற்றும் ரெலோ கட்சி தலைவர்கள் வடக்கு முதலமைச்சருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுவரும் நிலையில் தமிழரசு கட்சியினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.