Jun 19

முதலமைச்சருக்கு ஆதரவாக களமிறங்கியது ஈ பி டி பி கட்சி

வட மாகாண முதலமைச்சர் ஈ.பீ.டீ.பீ கட்சியுடன் கூட்டிணைந்துகொள்வதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. வட மாகாண சபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு என்னும் நிலமை ஏற்பட்டால் முதலமைச்சரிற்கு ஆதரவாகவே ஈ.பீ.டி.பியின் இரு உறுப்பினர்களும் வாக்களிப்பார்கள் என டக்ளஸ் தேவானந்தா சி.வி.விக்னேஸ்வரனிடம் நேரடியாக உத்தரவாதமளித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையில் தற்போது ஏற்பட்டிருக்கும் முதலமைச்சரிற்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நிலமை சபையில் வாக்கெடுப்பிற்கு வரும் சூழல் ஏற்பட்டால் தனது கட்சியின் இரு உறுப்பினர்களும் நிச்சயமாக உங்களிற்கே ஆதரவளிப்பார்கள் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஈ.பீ.டி.பியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா உறுதிமொழி வழங்கியுள்ளார்.

இதன் பிரகாரம் கூட்டமைப்பின் ஈ.பி.ஆர்.எல்.எவ் , ரெலோ , புளட் ஆகிய கட்சிகளுடன் தற்போது ஈ.பீ.டி.பியும் இணைவது உறுதி செய்யப்படுகின்றது. இவ்வாறு குறித்த வாக்குறுதி அளிக்கப்பட்டது தொடர்பில் ஈ.பீ.டி.பியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பின்றுமான டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு கேட்டபோது ,

மேற்படி விடயம் தொடர்பில் நான் பேசவில்லை என்றோ அல்லது பேசினேன் என்றோ கூறமாட்டேன். ஆனால் விடயத்தினை கூர்ந்து கவனிக்கின்றோம். என்று மட்டுமே ஊடகத்திற்கு கூறலாம்  என்றார். –

வட மாகாண முதலமைச்சருடன் ஏற்கனவே ரெலோ , புளட் , ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ள நிலையில் தற்போது ஈ.பீ.டீ.பீயும் இணைகின்றது. இதேநேரம் தமிழரசுக்கட்சியே தேசவிரோதக் கும்பலான ஈ.பீ.டீ.பீயுடன் இணைகின்றது என பலராலும் ஊகம் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.