Nov 12

கோடாலிக் கல் குளத்தினை புனரமைக்கும் இராணுவத்தினர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக உடைப்பெடுத்த கோடாலிக் கல் குளததினை இரானுத்தினர்  மற்றும் விவசாயிகள் கமநல சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து புனரமைப்பு பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

 நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைக் காரணமாக நாட்டின் வட பகுதியில் பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கின.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கோடாலிக் கல் குளமும் பகுதியளவில் சேதமடைந்தது.

இதனையடுத்து  குறித்த குளத்தினை புனரமைக்கும் பணிகளில்  இரானுத்தினர்  மற்றும் விவசாயிகள் கமநல சேவை உத்தியோகத்தர்கள் இணைந்து ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது,