Nov 12

காந்தக் குரலால் அசத்திய கழுதை! அதிர்ச்சியில் உரைந்த மக்கள்"

கழுதை கனைத்துக் கேட்டிருப்போம்.. ஆனால் பாடிக் கேட்டதுண்டா?அயர்லந்தில் அந்த விநோதம் நடந்துள்ளது.அயர்லந்தில் வசிக்கும் மார்ட்டின் ஸ்டான்டன் (Martin Stanton) தமது வீட்டு அருகில் இருக்கும் கழுதை ஒன்று அழகிய குரலில் பாடியதைக் கேட்டு இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.

அதன் குரலைப் பதிவு செய்து அந்தக் காணொளியை சமூக ஊடகங்களில் அவர் பகிர அது பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.ஒரு சில ஆண்டுகளாகவே கழுதையை கவனித்து வந்த திரு. மார்ட்டின், அதற்குக் கொடுப்பதற்காக ஏதாவது உணவுப் பொருளை எடுத்துச் செல்வதுண்டாம்.

தொலைவிலேயே அதை கவனித்துவிடும் கழுதை, தனக்கு விருந்து கிடைக்கப் போவதை உணர்ந்து உற்சாகத்தில் குரல் எழுப்புமாம்.அது தேர்ந்த Opera பாடகியின் குரலைப் போல் இருப்பதை உணர்ந்து, கழுதையின் கானத்தைப் பதிவு செய்ய முடிவெடுத்தார்.

கழுதைக்குப் பிடித்தமான தின்பண்டத்தைக் கையிலெடுத்துச் சென்று வெற்றிகரமாக அதன் கானத்தைப் பதிவு செய்தார்.அயர்லந்தில் பல கழுதைகள் இருந்தாலும் அந்த கானக் குரல்திரு. மார்ட்டின் வீட்டிற்கு பக்கத்தில் இருந்த கழுதைக்கே கிடைத்துள்ளது