Jun 19

லண்டனில் தொடங்கும் ரஹ்மான் 25 இசை சுற்றுப்பயணம்!

ஏ.ஆர். ரஹ்மான் தனது 25 வருட திரைப்பயணத்தையொட்டி லண்டனில் தனது இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்.

Yesterday, Today, Tomorrow’ (நேற்று இன்று நாளை) என்கிற இந்த இசை சுற்றுப்பயணத்தின்முதல் நிகழ்ச்சி ஜுலை 8 அன்று லண்டனில் நடைபெறுகிறது.இதுகுறித்து ஏ,ஆர். ரஹ்மான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:

‘‘கடந்த 25 வருடங்களாக தொடரும் இசைப்பயணம் உண்மையிலேயே மறக்கமுடியாதது. ஆச்சரியமானது. இந்த இசை சுற்றுப்பயணம் முழுக்க இசையும் நினைவுகளும்தான். என் ரசிகர்களின் அன்பைப் பெற நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன். அவர்களுடைய ஆதரவு எனக்கு ஊக்கம்தருகிறது.

‘ரோஜா’ முதல் ‘காற்று வெளியிடை’ படங்கள் வரைக்குமான என் இசைப்பயணத்தைக் கொண்டாடும் லண்டன் நிகழ்ச்சியை மிகவும் எதிர்பார்க்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த இசை நிகழ்ச்சியில் பென்னி தயால், நீத்தி மோகன், ஹரிசரன், ஜொனிடா காந்தி, ஜாவத் அலி போன்ற பிரபல பாடகர்கள் பங்கேற்கிறார்கள்.