Jun 19

நிழலான சாம்பியன்ஸ் கனவு: கோபத்தில் டிவியை உடைத்த ரசிகர்கள்

பாகிஸ்தானுக்கு எதிரான ஐசிசி சாம்பியன்ஸ் தொடரில் இந்திய அணி தோல்வியை சந்தித்ததால் கோபத்தில் கொந்தளித்த ரசிகர்கள் டிவியை போட்டு உடைத்துள்ளனர்.

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில், லண்டனில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி தன்னுடைய பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங் தேர்வு செய்தது.இதையடுத்து களமிறங்கிய அதிரடி பாகிஸ்தான் 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 338 ரன்கள் குவித்தது.

பின்னர் இமாலய இலக்கை துரத்திர இந்திய அணியில் சொதப்பலால் படு பயங்கரமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ரன்கள் மட்டுமே எடுத்து 180 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இந்திய அணி வீரர்கள் என்னமோ தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள், ஆனால், இந்த தோல்வியை ரசிகர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

உத்தரகாண்ட்டின் ஹரித்துவார், உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் மற்றும் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள பால்டி ஆகிய பகுதிகளில் கிரிக்கெட் ரசிகர்கள் டிவியை தாறுமாறாக போட்டு உடைத்துள்ளனர்.