Nov 08

உக்ரேனிய சமூக சேவையாளருக்கு அஞ்சலி!

உக்ரேன் நாட்டு சமூக சேவகர் கதரினா ஹென்சியோகிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

கடந்த ஜுலை மாதம் 31 ஆம் திகதி தனது மாடிக்குடியிருப்பு அறையில் வைத்து சல்பூரிக் அமிலத் தாக்குதலுக்கு சிவில் சேவையாளர் கதரினா ஆளாகியுள்ளார்.

மனித உடலில் 40 சதவீத சதைப் பகுதியை அழிக்கக்கூடிய சக்தியை சல்பூரிக் அமிலம் கொண்டுள்ளது. இந்நிலையில், உடல் சிதைவுக்குள்ளான கதரினாவிற்கு கிட்டத்தட்ட 11 சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனினும், தீவிர சிகிச்சைகளில் எந்தவித பயனுமின்றி, கதரினா ஹென்சியோக் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், அவருடைய ஈடுசெய்யமுடியாத இழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், நேற்று (புதன்கிழமை) அவருடைய குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உட்பட அந்நகர மேயர் வொலோடிமிர் மைகொலயென்கோவும் கலந்து கொண்டுள்ளார்.

இவருடைய மரணத்திற்கு காரணமான அமிலவீச்சை மேற்கொண்ட குற்றவாளி நேற்று முன் தினம் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும் உக்ரேனிய ஜனாதிபதி பெற்றோ பொரசென்கோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.