Jun 18

இரு அமைச்சர்களிடம் உத்தரவாதம் ஏன் அவசியம்; விளமளிக்கிறார் முதல்வர் சி.வி

ஏனைய இரு அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகவும் நீதியான விசாரணை நடைபெற வேண்டும் என்பதற்காகவே உத்தரவாதத்தை வலிந்து கோருகின்றேன் என முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாண முதலைமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தன்னால் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள இரண்டு மாகாண அமைச்சர்களும் விசாரணைகளில் தலையீடு செய்ய மாட்டோம் என்ற உத்தரவாத கடிதமொன்றை வழங்கும் பட்சத்தில் கட்டாய விடுமுறை தீர்ப்பை மீள்பரிசீலனை செய்வதாக உறுதியாக கூறிவருகின்றார்.

ஏனினும் அவர் அவ்வாறு கட்டாய விடுமுறை வழங்க முடியாது. ஆது அரசியலமைப்பிற்கு முரணானது.அத்துடன் முதலமைச்சரின் விசாரணைக்குழு குற்றவாளிகளாக காணப்படாத இரு அமைச்சர்கள் மீது எவ்வாறு இத்தகைய தீர்பை வழங்க முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் மற்றும்  தமிழரசுக்கட்சியின் தலைவர் உட்பட அக்கட்சியினர் அனைவரும் கேள்வி எழுப்புகின்றனர். 

இந்த இழுபறி நிலைமை நீடிப்பதால் இப்பிரச்சினையை சுமூகமாக தீர்த்துக்கொள்வதில் சிக்கல் நிலைமைகள் தொடர்ந்தவண்ணமுள்ளன. இத்தகைய நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காணமல்போனவர்களின உறவினர்கள் வடமாகாண முதலமைச்சரை சந்தித்தித்திருந்தனர்.

அதன் பின்னர் ஊடகவியாலளர்கள் முதலமைச்சரிடத்தில் கேள்யெழுப்போது தாங்கள் என்ன காரணத்திற்காக இரு அமைச்சர்களும் எழுத்து மூலம் உத்தரவாதம் வழங்க வேண்டும் அல்லது சம்பந்தன் உத்தரவாதமளிக்க வேண்டும் என்ற நிபந்தையில் விடாப்பிடியாக இருக்கின்றீர்கள். ஆந்த நிபந்தனையை கைவிட்டால் இப்பிரச்சினைக்கு சுமகமாக தீர்வைப் பெறமுடியுமல்லவா? எனக் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அதற்குப்பதிலளித்த முதலமைச்சர், 

நான் இரு அமைச்சர்கள் குற்றவாளிகள் அவர்கள் பதவி விலக வேண்டும் என சபையில் அறிவித்தேன். அதேபோன்று இரு அமைச்சர்கள் விசாரணைகள் நிறைவடையும் வரையில் விடுமுறையில் இருக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டேன்.

நான் அந்த தீர்ப்பை அறிவித்த அன்றைய தினமே அமைச்சர்கள் கோப்புக்களை, சில ஆவணங்களை அலுவலகத்திலிருந்து எடுத்துச் சென்றதாக அறிகின்றேன். ஆவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதற்கு சந்தர்ப்பம் வழங்க கூடாது என்பதற்காகவும் நீதியான விசாரணைகள் நடைபெறவேண்டும் என்பதற்கவுமே அந்தக் கோரிக்கையில் இறுக்கமாக இருக்கின்றேன் என்றார்.