Nov 06

மகிந்த நியமனம் அரசமைப்பிற்கு முரணானதில்லை - வெளிவிவகார அமைச்சர்

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியது அரசமைப்பிற்கு விரோதமான முறையில் இடம்பெறவில்லை என புதிய வெளிவிவகார அமைச்சர் சரத் அனுமுனுக  தெரிவித்துள்ளார்.


பாராளுமன்றத்தில் இடம்பெறும் வாக்களிப்பு புதிய அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும்  என தெரிவித்துள்ள சரத் அமுனுகம இது யார் முதலில் செயற்படுவது என்ற விடயம் என வர்ணித்துள்ளார்.

இலங்கையின் முதலாவது அரசமைப்பு சதியில் மகிந்த ராஜபக்ச தரப்பினர் ஈடுபட்டனர்  பெரும்பான்மையை பெறுவதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இலஞ்சம் வழங்க முன்வந்தனர்  பெரும்பான்மையை பெரும் வரை பாராளுமன்றத்தை தாமதப்படுத்தினர் என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை வெளிவிவகார அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க தரப்பினரும் இதனையே செய்திருப்பார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சபாநாயகர் பாராளுமன்றத்தில்  பெரும்பான்மை நிருபிக்கப்படும் வரை  மகிந்த ராஜபக்சவை பிரதமராக  ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சரத் அமுனுகம இது சபாநாயகருடைய விடயமில்லை,அரசமைப்பின் கீழ் அவரிற்கு இதற்கான அதிகாரமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு இந்தியாவின் பக்கமோ சீனாவின் பக்கமோ சாயாது  இரு நாடுகளின் நட்பின் மூலம் நன்மை பெற முயலும் எனவும் சரத்அமுனுகம தெரிவித்துள்ளார்

நாங்கள் எவரி;ன் பக்கம் சாயவில்லை,நாங்கள் இரு நாடுகளின் பக்கத்திலிருந்தும் சமதூரத்திலிருக்கின்றோம்  ஒரு பக்கம் சாய்வதால் எங்களிற்கு எந்த பிரயோசனமும்  இல்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் என்ன நடக்கின்றது என்பது இந்தியாவிற்கு மாத்திரமன்றி ஏனைய உலக நாடுகளிற்கும் நாங்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வந்துள்ளளோம்,அம்பாந்தோட்டை ஒரு வர்த்தக துறைமுகம்  அது இராணுவநோக்கத்தை கொண்டதல்ல எனவும் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

சீனா அரசாங்கம் மகிந்த தரப்பிற்கு பணம் கொடுக்கின்றது என் நான் கருதவில்லை எனஅவர் தெரிவித்துள்ளார்.