Nov 05

"தீபாவளிக்கு" ஆயத்தமாகும் திருகோணமலை மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இன்று கொள்வனவு செய்வதில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு திருகோணமலை, மகேஷர் மைதானத்தில் அங்காடி கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரிகள் வியாபாரம் செய்து வருவதையும் காணக்கூடியதாக உள்ளது.


திருகோணமலை நகர பகுதிகளில் உள்ள சந்தையில் மக்கள் தங்களது வீட்டுக்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்கின்றார்கள்.

அதேவேளை, மழை பெய்கின்ற போதும் சந்தைக்கு மக்கள் வருவதை காணக்கூடியதாக உள்ளது.

இம்முறை தீபாவளி பண்டிகையானது திருகோணமலை மாவட்டத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட உள்ளதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.