Jun 18

'எமக்கான தீர்வைப் பெற்றுத்தாருங்கள் உங்களை நாங்கள் நம்பியிருக்கின்றோம்'

வடக்கு மாகாணசபையில் தோன்றியுள்ள இக்கட்டான சூழ்நிலையையடுத்து வடமாகாண முதலமைச்சருக்கான ஆதரவு பெருகிவருகிறது. இந்தவகையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து கலந்துரையாடியுள்ளதுடன் எமது உறவுகளைத் தேடித்தரும் பொறுப்பு உங்களுடையது என மன்றாட்டமாக கோரியுள்ளனர்.

 வடக்குமாகாண முதலமைச்சருக்கெதிரான நம்பிக்கையிலாலத் தீர்மானம் இலங்கைத் தமிழரசுக் கட்சியினால் வடமாகாண ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அதன் எதிரொலியாக முதலமைச்சருக்கு ஆதரவுதெரிவித்து கவனயீர்ப்புப் போராட்டங்கள் கர்த்தால் கடையடைப்புப் போராட்டங்கள் நடைபெற்றுவரும் சூழ்நிலையில்  காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் எமக்கான நீதியை முதலமைச்சர் தான் பெற்றுத்தரவேண்டும் என அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.

 இச்சந்திப்பில் கலந்துகொண்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாயொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம். நீங்கள் வடக்கு மாகாண முதலமைச்சராக தொடர்ந்தும் செயற்படவேண்டும். முதலமைச்சராகப் பதவியேற்றபோத அன்று உங்கள் கால்களில் விழுந்து வணங்கிச்சென்றேன். காரணம் நீங்கள் தான் நீதியை வழங்குவீர்கள் என்று நம்பியே நீதியை ஒரு நீதிமான்தான் பெற்றுத்தரவேண்டும்

 பலரும் பல கதைகளை கருத்துக்களைச் சொல்வார்கள். நீதியைப் பெற்றுத்தரபவர்களுக்கு பல துன்பங்களை அனுபவிப்பார்கள் இருந்தும் நீங்கள்தான் நீதியைப் பெற்றுத்தரவேண்டும். உங்களால்தான் அது முடியும்.