Jun 18

சம்பியன் தொடர் கிண்ணத்தைக் கைப்பற்றி பாகிஸ்தான் சாதணை

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றி சாதனைப் படைத்தது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டி இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இந்த போட்டியில் அரை இறுதியில் வெற்றி பெற்ற இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி பந்து வீச முடிவு செய்தது. இதனை அடுத்து பாகிஸ்தான் அணியினர் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.

பாகிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான அசார் அலி (59)இ ஜமன் (114) ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர் வலுவான ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்து ஆசம் (46)இ சோயிப் மாலிக் (12) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினர்.

இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஹர்தீக் பாண்ட்யா, கேதர் ஜாதவ் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

வசிம் (25) மற்றும் ஹபீஸ் (57) ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு பாகிஸ்தான் 338 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா (0)இ தவான் (21) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். கோஹ்லி (5)இ யுவராஜ் சிங் (22)இ தோனி (4)இ ஜாதவ் (9)இ ஜடேஜா (15)இ அஸ்வின் (1)இ மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா (1) ஏமாற்றமளித்தனர்.

ஹர்தீக் பாண்ட்யா (76) அரை சதம் கடந்தார். புவனேஷ்வர் குமார் (1) ஓட்டத்தை பெற்று எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

போட்டியின் முடிவில் இந்திய அணி 30.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 158 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால் பாகிஸ்தான் அணி 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் தடவையாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை கைப்பற்றியது.