Nov 05

இந்துக்களின் சகிப்பு தன்மையை சோதிக்க வேண்டாம்: உமாபாரதி

உலக அளவில் இந்துக்கள் தான் அதிக சகிப்புத்தன்மை கொண்டவர்கள். அவர்களின் சகிப்பு தன்மையை சோதிக்க கூடாது என பா.ஜ.,தலைவர்களில் ஒருவரான உமாபாரதி கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அயோத்தியில் நிலவி வருவது நிலப்பிரச்னை. மத நம்பிக்கைகள் தொடர்பான பிரச்னைகள் அல்ல. ராமர் பிறந்த இடம் அயோத்தி.அவருக்கு அங்கு கோயில் கட்டுவது தான் சரியான முடிவாகும்.

மெக்காவில் கோயிலும் வாடிகனில் மசூதியும் இருக்க முடியாதோ அது போல அயோத்தியில் வேறு வழி பாட்டு தலங்களும் அமைக்க இயலாது. அயோத்தியில் மசூதி கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பி, இந்துக்களின் சகிப்பு தன்மையை சோதிக்க வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.