Jun 18

தந்தையர் தினம்

தந்தையர் தினம்.

என் கண்ணில் கண்ட  தெய்வம்

என் கடவுள் தந்த வைரம்

நானிருந்த கருவறையும் -தன்

கண்ணில் வைக்கும் புனிதம்


உதிரம் தந்து உயிர் கொடுத்தாய்-எம்

உளமதினில் நிலைத்து விட்டாய்

அறிவூட்டி எமைக் காத்து-இன்று

அகில மெங்கும் புகழச் செய்தாய்


குடும்பத்தின் தலை மகனே

சுமைகளெல்லாம் சுமப்பவனே-என்

தாயவளின் திலகமல்லோ-நீ

தரணி போற்றும் சிகரமல்லோ


தந்தை என்று சொன்னாலே-என்

சிந்தை இங்கு கலங்குமல்லோ

என் வாழ்வின் தோழன் நீ -எமை

வழி நடத்தும் ஆசான் நீ


                   கவிஞர் 

              நாவாயூரான்      

வென்சிலாஸ் அனுரா

             கனடா.