Mar 19

2ஆவது டெஸ்ட்டில் தென் ஆபிரிக்கா அபார வெற்றி

நியூசிலாந்து தென் ஆபிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில்  தென்ஆப்பிரிக்கா 8விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்கா அணி  முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் ஹென்றி நிக்கலஸ் 118 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க அவ்வணி 268 ஓட்டங்களை எடுத்தது.  தென் ஆபிரிக்க சார்பில் டுமினி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா குயிண்டன் டி கொக் (91), பௌமா (89) துணையளிக்க அவ்வணி 359 ஓட்டங்களைக் குவித்தது சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.

91ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளரான கேஷவ் மகாராஜின் 171 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜீத் ராவல் மட்டும்  80ஓட்டங்கள் பெற்றுக்கொடுத்தார். 

மகாராஜ் 20.2 ஓவர்கள் வீசி 40 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். மோர்னி மோர்கல் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

81ஓட்டங்களை இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த தென்ஆப்பிரிக்கா  

24.3 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 83ஓட்டங்களைப் பெற்ற 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

மகராஜ் ஆட்டநாயகனர்கு தெரிவு செய்யப்பட்டதோடு இரு அணிகளுக்கு இடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் ஹமில்டனில் 25ஆம் திகதி ஆரம்பமாகின்றது. 

இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமநிலையில் பூர்த்தி செய்துகொள்ள முடியும்.