Jun 17

வீடு ஒன்றை வாகனத்தால் மோதிய பெண்கள்

ரொரன்ரோவில் வாகனம் ஒன்று வீடு ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் ஒன்று இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

ஸ்டீல்ஸ் அவனியூ மற்றும் பாதர்ஸ்ட் வீதிப் பகுதியில், நியூட்டன்புரூக் குடியிருப்பில் அதிகாலை 3.30 அளவில் இந்த சம்வம் இடம்பெற்றுள்ளதாகவும், வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி வீதி ஓரத்தில் இருந்த வீடு ஒன்றின் மீது மோதியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது அந்த வாகனத்தில் பெண்கள் இரண்டு பேர் இருந்ததுடன்,  அந்த வீட்டை மோதித் தள்ளியதால் வாகனம் நசித்து சேதமான நிலையில், அந்த இரண்டு பெண்களும் வாகனத்தினுள் சிக்கிக்கொண்டனர்.

சம்பவ இடத்திற்கு வரவழைக்கபட்ட மீட்புப் படையினர் அந்த இரண்டு பெண்களையும் வெளியில் கொண்டு வந்த நிலையில், அவர்கள் இருவரும் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் இருவரின் உயிருக்கும் ஆபத்தில்லை என்று நம்பப்படுகிறது.

அதேவேளை இந்த விபத்திற்கு மது போதை காரணமாக இருக்கக் கூடும் என்றும், அந்த இரண்டு பெண்களும் மது போதையில் இருந்ததாக தெரிவதாகவும் காவல்த்தறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதா என்பது தொடர்பான தகவல்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இதேவேளை அந்த வாகனத்தினால் மோதுண்ட அந்த வீட்டில் சம்பவத்தின் போது யாரும் இருக்கவிலலை என்றும் தெரிவிக்கப்படுகிறது.