Mar 19

மாரடைப்பால் சந்திர ஹாசன் காலமானார்

சந்திர ஹாசன் தனது 82ஆவது வயதில் மாரடைப்பால் லண்டனில்  காலமானார்.

பரமக்குடியில் பிரபல குற்றவியல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936ஆம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார்.

கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன் அண்மைகாலமாக லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் வீட்டில் தங்கியிருந்தார். 

இந்நிலையில் இவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் இன்று மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்திர ஹாசனின் மனைவி கீதா மணி, கடந்த ஜனவரி மாதம் சென்னையில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.