Jun 17

ஆப்லைனில் விற்பனைக்கு வந்த நோக்கியா!!

நோக்கியா 3 ஸ்மார்ட்போன் விற்பனை இந்தியாவில் துவங்கியுள்ளது. ஆன்லைனில் துவங்கப்பட்ட விற்பனை தற்போது ஆப்லைன் சந்தைகளிலும் துவங்கியுள்ளது.நோக்கியா விற்பனை மையங்கள் மற்றும் எச்எம்டி குளோபல் விற்பனை மையங்களில் நோக்கியா 3 ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் வாங்கலாம். 

இதற்காக 400 பிரத்தியேக விற்பனையாளர்கள் மற்றும் 80,000 விற்பனை மையங்கள் இயங்குகின்றன. நோக்கியா 3 விலை ரூ.9,499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

சில்வர் வைட், மேட் பிளாக், டெம்ப்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் வைட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

நோக்கியா 6 அமேசானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஆஃப்லைன் கிடைக்கிறது.