Oct 23

விடுதலை புலிகளின் அரசியல் தலைமை தொடர்ந்தும் செயற்பட்டே வருகின்றது

விடுதலை புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம் தொடர்ந்தும் செயற்பட்டுக்கொண்டே இருப்பதாகவும் அவர்களை முற்றாக அளிக்கவில்லை என்றும் பொதுபலசேனா தெரிவித்துள்ளது.

கொழும்பில் பொதுபலசேனா அமைப்பினால் இன்று (செவ்வாய்க்கிழமை) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே வித்தாரந்தெனியே நந்த தேரர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “புலிகள் அமைப்பில் யுத்தங்களை செய்தவர்கள், அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என 3 பிரிவுகள் காணப்பட்டது.

இதில் இறுதி யுத்தம் நிறைவில் யுத்தம் செய்தவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னர் மூன்று தசாப்தகாலமாக நாட்டில் காணப்பட்ட பயங்கரவாதம் முடிவடைந்து விட்டது என்றே அனைவரும் கருதினார்கள்.

இருப்பினும் புலிகள் அமைப்பில் யுத்தத்திற்கு தலைமை வகித்த பிரிவு மட்டுமே தோற்கடிக்கப்பட்டது. ஆனால் புலிகள் அமைப்பின் அரசியல் தலைமைத்துவம், சர்வதேச தலைமைத்துவம் என்பன தொடர்ந்தும் இயங்கி கொண்டேதான் இருக்கின்றது.

எனவே 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட போதிலும், நாட்டில் பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படவில்லை” என கூறினார்.