Oct 23

வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட உறுப்பினர் என். விந்தன்கனகரட்ணம் அவர்களின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வறுமைக்கோட்டுக்குஉட்பட்ட மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணசபையின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம் தனது 2018 ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டின்மூலம் புத்தூர், அச்சுவேலி, அராலி, பருத்தித்துறை பகுதிகளைச் சேர்ந்த ஏழுபயனாளிகளுக்கு ரூபா ஒரு இலட்சத்து ஐயாயிரம் பெறுமதியான ஏழுதுவிச்சக்கர வண்டிகளை நேற்றைய தினம் புத்தூர் மகாத்மா காந்தி சனசமூகநிலையத்தில் வைத்து சுயதொழில் மேற்கொள்பவர்களுக்கும், தூரதேசங்களிலிருந்து கால்நடையாக பாடசாலைக்குச் செல்லும் வறிய நிலைமாணவர்களுக்கும் வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வானது புத்தூர் மகாத்மா காந்தி சனசமூக நிலைய தலைவர்கோவிந்தன் குணசிங்கம் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின்ஏற்பாட்டாளராகவும், பயனாளிகளைத் தெரிவு செய்தவருமான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் கிழக்கு பிரதேசசபை உறுப்பினர்சுப்பிரமணியம் சிவபாலன் (சிவா) மற்றும் வலிகாமம் கிழக்கு பிரதேசசபையயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த தவிசாளர் தியாகராசாநிரோச் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.