Oct 23

மாட்டு வண்டியில் வருகை தந்த பிரதேசசபை உறுப்பினர்கள்


பொதுஜன பெரமுனவின் வீரகெட்டிய பிரதேசசபை உறுப்பினர்கள் இருவர் இன்று மாட்டு வண்டியில் ஏறி பிரதேச சபைக்கு வந்துள்ளனர். 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகவே அவர்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். 

வீரகெட்டிய, மீகஸ்ஆர சந்தியில் இருந்து இருவரும் பிரதேச சபைக்கு மாட்டு வண்டியில் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இருவரும் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்று எரிபொருள் பெற்றுக் கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.