Oct 23

நமது வளத்தை பாதுகாக்க உலக சொந்தங்களுக்கு அங்கஜன் அழைப்பு

நமது வளங்களை பாதுகாத்தும் இருக்கும் வளங்களை சிறந்த முறைமையில் கையாண்டு நமது வடக்கின் பொருளாதார  ஸ்திர தன்மையினை வலிமையானதாக்கிக் கொள்ள உலக சொந்தங்களுக்கு விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன்  இராமநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

சாவகச்சேரி நுணாவில் பிரதேச முருகன் ஆலய முன்றலில் அமைந்துள்ள நுணாவில் குள தூர்வாரி புனருத்தாரணப் பணிகள் நிறைவு பெற்று அதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்திருந்து,கருத்து தெரிவிக்கும்பொழுதே விவசாய பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன்  இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

உலக நாடுகளில் நமது சொந்தங்கள் செல்வசெளிப்போடு இருக்கின்றார்கள்,அவர்கள் நமது தேசம் மீது அளவு கடந்த நேசம் கொண்டுள்ளனர். எந்தளவு தூரம் நமது சேமிப்புக்களை வலுவுள்ளதாக்கியுள்ளமோ அதே அளவுக்கு நமது வளங்களையும் சேமித்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

ஆய்வு அறிக்கை ஒன்றிலே சிகப்பு எச்சரிக்கை நமது மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ளது.நமது தலைமுறையினருக்காக அதன் தார்ப்பரியத்தினை  நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.நமது வளங்கள் குறித்து அனைவரிடமும் அந்த சிந்தனையும் கொள்கையும் செயலாக்கம் பெறவேண்டும்.

யாழ் குடா நாட்டில் உலக சொந்தங்களினால் ஆலயங்களை நிர்மாணம் செய்வதற்கும் ,புனருத்தானம் செய்வதற்கும் நிதிகள் வழங்கப்படுவதை போல,கோவிலுக்கு முன்பாகவே அமைந்துள்ள இந்த குளத்தினை புனரமைத்ததன் மூலமாக வானம் பார்த்தபூமியாகவும்,நிலத்தடி நீரையும் நம்பி  விவசாயம் செய்பவர்களுக்கு இவ்வாறான வளங்களையும் பாதுகாக்க வேண்டும்.அதன் மூலம் விவசாய தலைமுறையினரையும் பாதுகாத்து  கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டார்.

பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் தரமான முறைமையில்  பத்தியாளர்களுக்கும், நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்ப்படுத்தாத வகையில்  செயற்ப்பாடுகளையும் ,ஆலோசனைகளையும் வழங்குவதற்கு அறுவடைக்கு பின்னரான தேசிய நிறுவனம் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் வடக்கின் விவசாயிகளின் நலன் கருதி இடபெற உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

மத்திய அரசின் சிறந்த கொள்கை திட்டமாக வெற்றியளித்திருக்கும் உணவகங்கள், வாழ்வாதாரத்தையும் தொழில் வாய்ப்பினையும் ஏற்ப்படுத்தும் முகமாக  மேலும் பல நிலையங்கள் கொண்டு வரப்பட உள்ளதாகவும் சில ஊடகங்களினால் மக்களுக்கு தவறாக விளக்கமளிக்கப்பட்டுள்ளதாகவும்  தெரிவித்திருந்தார்.

தரம் ஐந்தில் சித்தி பெற்றிருந்த பாடசாலை மாணவர்களுக்கு விவசாய பிரதி அமைச்சரினால் மா,பலா மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டிருந்தது. அண்மையில் பாடசாலைகளிலும் பழமர தோட்டங்களை உருவாக்கி இயற்க்கை பழகனிகளை சந்ததயினருக்கு வழங்கும் பொருட்டு,பழமர கன்றுகள்  வழங்கி வைக்கப்பட்டும், பாடசாலை வளாகங்களில் விவசாய பிரதி அமைச்சரினால்  நாட்டியும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் jura foundation நிறுவனத்தின் கணேசமூர்த்தி,உறுப்பினர்களான கணேசமூர்த்தி கபிலன்,ஆலோசகர் டேவிட் ஜோசப்,விவசாய பெருமக்கள்,அரச அதிகாரிகள்,பாடசாலை மாணவர்கள்,பெற்றோர்கள்,பிரதேச மக்கள்,ஆலய நிர்வாகத்தினர் என பலர் இணைந்திருந்தனர்.