Oct 22

திருகோணமலையில் அதிரடி சுற்றிவளைப்பு – 9 பேர் கைது


திருகோணமலை - சீனன்குடா பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றி வளைப்பொன்றில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன்போது அவர்களிடம் இருந்து ஒன்றைரை கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது கொஸ்கொட பகுதியை சேர்ந்த அவர்கள், வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது சீனன்குடா காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுபவர்கள் என்பது விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.அவர்கள் நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.