Jun 16

நோக்கியா 6, மோட்டோ ஜி5 பிளஸ்: எது சிறந்தது?

சர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை 14-ந்தேதி முன்பதிவு துவங்கி அதன் பின் பிளாஷ் முறையில் விற்பனை செய்யப்படவுள்ளது. நோக்கியா 6 ஸ்மாராட்போனுடன் நோக்கியா 3 மற்றும் நோக்கியா 5 ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்பட்டன. 

முன்னதாக சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட நோக்கியா 6 இரண்டு பிளாஷ் விற்பனைகளில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா 6 மோட்டோரோலா மற்றும் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக அமையும். 

அந்த வகையில் நோக்கியா 6 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் எந்த ஸ்மார்ட்போன் தலைதிறந்த அம்சங்களை கொண்டுள்ளது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி, 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 401 பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. இதன் ஐ.பி.எஸ். எல்சிடி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் வி3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், மல்டி டச் கொண்ட நோக்கியா 6 கையில் பயன்படுத்த வசதியாக உள்ளது. 

மோட்டோ ஜி5 பிளஸ் 5.2 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே மற்றும் 424 பிக்சல் டென்சிட்டி கொண்டுள்ளது. இதன் ஐ.பி.எஸ். எல்சிடி டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் வி3 கொண்டு பாதுகாக்கப்படுகிறது. கேபாசிட்டிவ் டச் ஸ்கிரீன், மல்டி டச் வசதி கொண்டுள்ளது. 

பிராசஸர்:

நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் கார்டெக்ஸ் ஏ53, குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 MSM8937 பிராசஸர், அட்ரினோ 505 கிராஃபிக்ஸ் மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர், கார்டெக்ஸ் ஏ53, குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 MSM8953 பிராசஸர், அட்ரினோ 506 மற்றும் 3 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. 

இன்டெர்னல் மெமரியை பொருத்த வரை நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 32 ஜிபியும், மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 16 ஜிபியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் மெமரியை கூடுதலாக 128 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா:புகைப்படங்களை எடுக்க நோக்கியா 6 ஸ்மார்ட்போனில் 16 எம்பி பிரைமரி கேமரா, ஃபேஸ் டிடெக்ஷன் ஆட்டோஃபோகஸ், 2.0 அப்ரேச்சர், டூயல் கலர் எல்இடி பிளாஷ், 4614x3464 பிக்சல் ரெசல்யூஷன் போட்டோ, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன் தரத்தில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, 2.0 அப்ரேச்சர் வழங்கப்பட்டுள்ளது. 

மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, சிமாஸ் இமேஜ் சென்சார், டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ், 1.7 அப்ரேச்சர், டூயல்-கலர் எல்இடி பிளாஷ் 4000x3000 பிக்சல் போட்டோ ரெசல்யூஷன், 1920x1080 பிக்சல் ரெசல்யூஷனில் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி செல்ஃபி கேமரா 2.2 அப்ரேச்சர், ஸ்கிரீன் பிளாஷ் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

வடிவமைப்பு:169 கிராம் எடை கொண்டுள்ள நோக்கியா 6 முழுமையான மெட்டல் வடிவமைப்பு கொண்டுள்ளது. ஆர்ட் பிளாக், மேட் பிளாக், டெம்பர்டு ப்ளூ மற்றும் காப்பர் நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனும் முழுமையான மெட்டல் வடிவமைப்பு, 155 கிராம் எடையில் லூனார் கிரே மற்றும் ஃபைன் கோல்டு நிறங்களில் கிடைக்கிறது. இத்துடன் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்ப்ளாஷ் ப்ரூஃப் வசதியும் வழங்கப்படுகிறது. 

பேட்டரி:நோக்கியா 6 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. லி-அயன் வகை பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் ஸ்மார்ட்போன்களில் பேட்டரியை வாடிக்கையாளர்கள் கழற்றி மாற்ற முடியாது. இதோடு மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனில் டர்போ பவர் மூலம் குவிக் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

கனெக்டிவிட்டி:டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள நோக்கியா 6 இரண்டாவது ஸ்லாட்டில் ஹைப்ரிட் சிம் கார்டும், முதல் ஸ்லாட்டில் நானோ சிம் கார்டு வசதி வழங்கப்பட்டுள்ளது. இரு ஸ்லாட்களும் 4ஜி, 3ஜி மற்றும் 2ஜி நெட்வொர்க் வசதி கொண்டுள்ளது. இத்துடன் ப்ளூடூத் வி4.1, ஏ-ஜிபிஎஸ், குளோனாஸ், என்.எப்.சி., மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 வழங்கப்பட்டுள்ளது. 

மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனிலும் டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது. நானோ சிம் ஸ்லாட்களுடன் 4ஜி, 3ஜி, 2ஜி மற்றும் ப்ளூடூத் வி4.2, ஏ-ஜி.பி.எஸ்., குளோனாஸ் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி 2.0 வழங்கப்பட்டுள்ளது. 

இத்துடன் இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் முன்பக்கம் கைரேகை ஸ்கேனர் மற்றும் வழக்கமான சென்சார்கள் வழங்கப்பட்டுள்ளன. 

விலை:நோக்கியா 6 மற்றும் மோட்டோ ஜி5 பிளஸ் ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.14,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனை ஏற்கனவே துவங்கி விட்ட நிலையில், நோக்கியா 6 பிளாஷ் முறையில் விற்பனைக்கு வருகிறது. ஜூலை 14-ந்தேதி முதல் நோக்கியா 6 முன்பதிவு துவங்குகிறது.