Jun 16

சேர்ப்பிய பிரதமராகிறார் ஓரினச்சேர்க்கைப் பெண்

சேர்ப்பியாவின் பிரதமர் பதவிக்கு முதன்முறையாக ஓரினச்சேர்க்கைப் பெண் ஒருவர் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

சேர்ப்பிய ஜனாதிபதி அலெக்சாண்டர் வூசிக் (ALEKSANDAR VUCIC) அரசாங்கத்தில் பொதுநிர்வாக அமைச்சராக பணியாற்றும் அனா (Ana Brnabic) என்பவரே பிரதமர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி அலெக்சாண்டன் வூசிக், ‘ அனா, பிரதமர் பதவிக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளார் என்று நான் நம்புகின்றேன். பொதுச் சுகாதாரம், கல்வி சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதற்காக அனா  திறம்பட செயற்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவிக்கான சேர்ப்பிய ஜனாதிபதியின் பரிந்துரை நாடாளுமன்றில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கான நாடாளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பு அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. எனினும் நாடாளுமன்றில் ஜனாதிபதி வூசிக்கின் சேர்ப்பிய முற்போக்கு கட்சியே பெரும்பான்மையை கொண்டுள்ளது என்பதால் அனா தெரிவு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.