Mar 18

ஐ.நா.வில் அரசாங்சாங்கம் செய்யவேண்டியது என்ன? கெஹெலிய எம்.பி கூறும் ஆலோசனை

ெனிவாவில்  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில்   இரண்டு திருத்தங்களை  செய்வதற்கு அரசாங்கத்துக்கு சிறந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது என கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும்  பாராளுமன்ற உறுப்பினருமான கெஹெலிய ரம்புக்வெல  தெரிவித்தார்.

 சர்வதேச நீதிபதிகள்   மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகம்  ஆகிய விடயங்களை   பிரேரணையிலிருந்து  நீக்கிக்கொள்வதற்கு  அரசாங்கம்  முயற்சிக்கலாம்.

ஆனால் அரசாங்கத்தின் நகர்வுகளை பார்க்கும்போது அவ்வாறு செய்யாமல் முழுமையாக அதனை ஏற்றுக்கொள்ளும் நிலைமையே காணப்படுகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் அமெரிக்காவும் பிரிட்டனும் இலங்கை  தொடர்பான  பிரேரணையை  சமர்ப்பித்துள்ளமை  தொடர்பி லேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

சர்வதேச நீதிபதிகள்   மற்றும் ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பு அலுவலகம்  ஆகிய விடயங்களை   பிரேரணையிலிருந்து  நீக்கிக்கொள்வதற்கு  அரசாங்கம்  முயற்சிக்கலாம்.  அந்த இரண்டு விடயங்களும்  மிகவும் பயங்கரமானவையாகும். என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.