Oct 21

திருடப்பட்டன தேவாலயத்தின் கூரைத்தகடுகள் !

400,000 யூரோ பெறுதியான கிருஸ்தவ தேவாலயத்தின் கூரைத்தகடுகள் திருடப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் பெட்ஃபோல்ட்டிலுள்ள பிரபல செய்ன்ட் தேவாலயத்தின் உலோகங்களினால் வேயப்பட்ட கூரைத்தகடுகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த தேவாலயத்தின் கூரையை மீண்டும் வேய்வதற்கான பணத்தை மக்கள் மத்தியில் வசூலித்து வருவதாக செய்ன்ட் தேவாலயத்தின் நிதி சேகரிப்பிற்குப் பொறுப்பான ஜோய்ஸ் புல்லொக் தெரிவித்துள்ளார்.

கூரையை வேய்வத்காக தற்பொது அமெரிக்காவின் நியூயோக் நகரிலிருந்து 1000 யூரொ நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும் வங்கியிலிருந்து காப்புறுதிப்பணம் 15,000 யூரோ கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் ஜெய்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

தாங்கள் இங்கிலாந்தின் ஒரு சிறிய கிராமத்தில் இருப்பதினால் நிதி வசூலிப்பது கடினமான பணியாக இருப்பினும், தங்கள் இப்பணியை எப்படியும் செய்து முடிப்போமென ஜொய்ஸ் புலொக் நம்பிக்கை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.