Oct 21

சர்ச்சைக்குரிய இராணுவ அதிகாரியை திருப்பியழைக்க நடவடிக்கை – இராணுவத்தளபதி

மாலியில் அமைதிகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதியை நாட்டிற்கு திருப்பி அழைப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.


மாலியில் ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் அங்கம் வகிக்கும் இலங்கை படையினரின் தளபதியை உடனடியாக இலங்கைக்கு திருப்பியழைக்குமாறு ஐநா இலங்கை அரசாங்கத்திடம் கோரியிருந்தது.

இந்தநிலையில் இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே இராணுவபேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “மாலியில் அமைதிகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரின் தளபதி கலன அமுனுபுரவை இலங்கைக்கு அழைப்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

ஐக்கிய நாடுகள் சபை விடுத்துள்ள உத்தரவினை தொடர்ந்தே குறிப்பிட்ட இராணுவ அதிகாரியை மீள அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கலன அமுனுபுர குற்றமிழைக்கவில்லை என நிருபித்த பின்னர் மீண்டும் அவரை அமைதிப்படை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தவும் தீர்மானித்துள்ளோம்.

குறித்த விவகாரம் காரணமாக ஐக்கிய நாடுகளிற்கும் அமைதிப்பணிகளில் ஈடுபட்டுள்ள இலங்கை படையினரிற்கும் இடையிலான உறவுகளில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை“ எனவும் தெரிவித்துள்ளார்.