Oct 20

இன்றைய ராசிபலன் (20.10.2018)

மேஷம்

உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிட்டும். சாதிக்கும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பம் விலகும். நீண்ட நாளாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். தடைகள் நீங்கும் நாள். 

மிதுனம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.  

கடகம்

சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். பிள்ளை களால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். கல்யாண பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியா பாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள். 

சிம்மம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக் கட்டும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள்.

கன்னி

எதிர்பாராத பணவரவு உண்டு. பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். திடீர் யோகம் கிட்டும் நாள். 

துலாம்

குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு அலைச்சல், வேலைச்சுமை வந்து நீங்கும். பழைய பிரச்னையில் ஒன்று தீரும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

தனுசு

துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகன வசதிப் பெருகும். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றி பெறும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் பிரச்னைகள் வந்துப் போகும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.

மீனம்

எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங் கள். வெளிவட்டாரத்தில் விமர் சனங்களை தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.